ஹெராயின் எடுத்துச் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் நேற்று கைது!

0
34

நீர்கொழும்பு பகுதியில் ஹெராயின் எடுத்துச் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நீர்கொழும்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 5 கிராம் 820 மில்லிகிராம் ஹெராயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு வெள்ளவீதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் செயற்படும் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த மற்றுமொரு இரகசிய தகவலின் அடிப்படையில் நீர்கொழும்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 7 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. களனி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் செயற்படும் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.