களவாடப்பட்ட பிறந்த நாள் கேக்; மீள ஒப்படைத்த இராணுவம்

0
74

77 ஆண்டுகளுக்கு முன்னதாக அமெரிக்கப் படையினரால் களவாடப்பட்ட பிறந்த நாள் கேக் ஒன்று மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.

US military delivers new birthday cake to Italian woman, 77 years after  American soldiers stole the original - CNN

இத்தாலிய பெண் ஒருவரிடமிருந்து 77 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கப் படையினர் பிறந்த நாள் கேக் ஒன்றை களவாடியுள்ளனர்.

குறித்த பெண்ணின் கிராமத்தில் அமெரிக்கப் படையினர் போரில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு கேக் கவளவாடப்பட்டுள்ளது.

அப்போது குறித்த பெண் 13 வயதான சிறுமி எனத் தெரிவிக்கப்படுகின்றது. மெரி மியான் (Meri Mion) என்ற 90 வயதான மூதாட்டிக்கு அமெரிக்கப் படையினர் புதிய கேக் ஒன்றை அவரது 90ம் பிறந்த நாளில் வழங்கியுள்ளனர்.

இத்தாலியில் வைத்து அமெரிக்கப் படையினர் இவ்வாறு களவாடப்பட்ட கேக்கிற்கு பதிலாக புதிய கேக் ஒன்றை வழங்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் திகதி அமெரிக்காவின் அமெரிக்காவின் 88ம் படையணி, ஜெர்மன் படையினருக்கு எதிராக போரில் ஈடுபட்டிருந்த போது கேக்கை களவாடியுள்ளனர்.

இது தொடர்பான தகவல் குறிப்புக்களின் அடிப்படையில் குறித்த மூதாட்டியை கண்டு பிடித்து அவருக்கு புதிய கேக் ஒன்றை இராணுவத்தினர் வழங்கியுள்ளனர்.

இந்த நாள் மகிழ்ச்சியான நாள் எனவும் குடும்பத்துடன் இந்த கேக்கை உண்டு மகிழ உள்ளதாகவும் மெரி மியொன் தெரிவித்துள்ளார். 

US Army 'returns' stolen cake to Italian woman 77 years later