போரால் டைம் இதழில் இடம்பிடித்த ஜெலென்ஸ்கி!

0
576

உக்ரைன் ரஷ்யா இடையில் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy)யின் புகைப்படத்தை டைம் இதழ் தனது அட்டை படத்தில் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வார பத்திரிக்கை டைம் இதழ். உலகம் முழுவதும் 50 நாடுகளில் இந்த இதழ் விற்பனையாகிறது. உலகின் புகழ் பெற்ற பத்திரிக்கைகளில் ஒன்றாக திகழ்கிறது.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy)யின் புகைபடத்தை அதன் அட்டை படத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) எப்படி வழிநடத்துகிறார் என்ற வரிகளுடன் டைம் வார இதழ் வெளியிட்டுள்ளது.

இந்த கவர் ஸ்டோரியை வெளியிட்ட நிரூபர் சைமன் ஸ்கஸ்டர்(Simon Schuster) ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy)யின் தினமும் நடைபெறும் நிகழ்ச்சியை பார்வையிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த இதழின் கவர் ஸ்டோரியில் ரஷ்யாவுடனான பயங்கரமான போருக்கு மத்தியில் உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) தனது நாட்டை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பது குறித்து விவரித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் நடிகராக இருந்தபோது மிகவும் நகைச்சுவையான மனிதராக திகழ்ந்தார்.

கடந்த இரண்டு மாதமாக ரஷ்யாவுடனான போர் அவரை மிகவும் கடினமான, கோபப்படும் மனிதராக மாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த போரில் உக்ரைன் மேற்கொண்ட சவால்கள் மற்றும் அழிவுகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.