இன்றைய ராசிபலன் {30 ஏப்ரல் 2022}

0
455

மேஷ ராசி

மேஷ ராசிக்கு என்பது மறக்க முடியாத நாளாக இருக்கும். உங்களின் இனிமையான பேச்சாலும் புத்திசாலித்தனமான செயல்களாலும் உங்கள் பணிகளில் நல்ல வெற்றிகளைப் பெறுவீர்கள். இதுவரை தடைப்பட்டுவந்த காரியங்கள் சிலவற்றை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்திலும் தொழிலிலும் நல்ல லாபகரமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வகையில் மகிழ்ச்சியான மற்றும் மென்மையான நிகழ்வுகள் நடக்கும் வீட்டில் சுப காரியங்கள் சிறப்பாக நடந்தேறும்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு இன்று உங்கள் வேலையில் நல்ல வெற்றிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான எண்ணங்கள் மனதில் ஓடும் அல்லது தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். என்பதால், அளிக்க முடியாமல் கிடப்பில் இருக்கும். வேலைகளை செய்ய முயற்சி செய்யவும். உங்கள் விருப்பப்படி வேலைத்திட்டங்களைச் செய்து முடிப்பீர்கள் உத்தியோகத்தில் மேலதிகாரி அல்லது சக ஊழியர்களின் உதவியால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். அதனால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

​மிதுன ராசி

மிதுன ராசிக்கு என்ற நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். வேலையாக இருந்தாலும் சரி குடும்ப விஷயமாக இருந்தாலும் சரி நீங்கள் நினைத்தது நிறைவேறும் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் சில தடங்கல்கள் வந்தாலும் அதை சிறப்பாக சமாளித்து முன்னேறுவீர்கள். நல்ல ஆதாயம் உண்டாகும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்களின் புத்திசாலித்தனத்தால் வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் லாபமும் மகிழ்ச்சி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.

கடக ராசி

கடக ராசிக்கு இன்று நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள் உங்கள் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும் வியாபாரத்தில் புதிய நுகர்வோர்கள் கிடைப்பார்கள் குடும்பத்திலிருந்த மனக்கசப்பும் சண்டை முடிவுக்கு வரும் பல நல்ல செய்திகள் கிடைக்கக்கூடிய நன்றாக இருக்கும் வேலை அல்லது தொழில் நான் எதுவாக இருந்தாலும் உங்களுக்கு நல்ல சமயம் கிடைக்கக் கூடிய நாளாக இருக்கும் அந்த சேமிப்பு குறித்து யோசிப்பீர்கள்.

​சிம்ம ராசி

சிம்ம ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் கவனம் தேவை. கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம் அதேசமயம் உங்கள் வேலைகளில் கடினமாக உழைப்பாலும் இனிமையான பேச்சாலும் மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். இதுபோன்று ஏற்ற இறக்கமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் செயல்களை சரியாக திட்டமிட்டு செய்ய சிறப்பான வெற்றிகளை பெற்றிட முடியும். பணியிடத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். புதிய திட்டங்களை தொடங்குவதற்கு சிறப்பான நாளாக இருக்காது, என்றாலும் உங்கள் சாதாரணமான வேலைகள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

கன்னி ராசி

கன்னி ராசிக்கு இன்று மதியத்திற்கு மேல் சந்திராஷ்டமம் வருவதால் காலையிலேயே உங்களின் வேலைகளுக்கான சரியான திட்டங்களும் செயல்களும் அவசியம். உங்களின் கடினமான உழைப்புக்கு நற்பலன் கிடைக்கும். சிறப்பான புரிதல் காரணமாக வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணியிடத்தில் பணிக்கான பாராட்டு கிடைக்கும். இன்று உங்களின் குடும்பத்தை கவனித்துக் கொள்வதும் அவர்களின் தேவைகளை நிறைவேற்ற முயல்வீர்கள். உங்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இருப்பினும் திடீர் செலவுகளும் திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு ஏற்படக்கூடும்.

துலாம் ராசி

துலாம் ராசிக்கு இன்று சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டிய நாள். மோதல் போக்கை கைவிடவும் கருத்து வேறுபாடுள்ள இடத்தில் இருந்து விலகி இருக்கவும்.

இருக்கும் இடத்தை இழக்காமல் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளுங்கள். சில விஷயங்களில் உங்களின் பிடிவாதத்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசியினருக்கு இன்று சுறுசுறுப்பும் இனிய நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் பெறுவீர்கள். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கையுடன் தொடங்குவீர்கள். குடும்பத்தின் முழு ஆதரவை பெறுவீர்கள். உங்கள் வேலையை கண்ணும் கருத்துமாக செய்து முடிப்பீர்கள்.

தனுசு ராசி

தனுசு ராசி பலன்கள் சிறப்பாக இருக்கக்கூடிய நாள். செயல் திறன் அதிகரிக்கும். துறையில் நீங்கள் இருந்தாலும் அதில் உச்சத்தைத் தொடுவதற்கு முன் நல்ல வெற்றி இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்களின் இனிமையான பேச்சால் மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம் வேலையில் விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். ஒருவரின் உதவியால் உங்களுக்கு நல்ல பணம் வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

மகர ராசி

மகர ராசிக்கு உற்சாகம் அதிகரிப்பதற்கான நாளாக இருக்கும். வேலையில் திட்டமிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள் மாணவர்கள் போட்டி போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. நண்பர்கள் உறவினர்கள் வகையில் மகிழ்ச்சியும் மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும்.

கும்ப ராசி

கும்ப ராசியினருக்கு பிரச்சினைகள் தீர்வதற்கான நாளாக இருக்கும். உங்களின் அனைத்து வேலையும் வெற்றியடைய வாய்ப்பு ஏற்படும். பணப்பரிவர்த்தனையில் லாபம் தரக்கூடிய நிலை உண்டாகும் உங்களின் பழைய நண்பர்களை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைக்கும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா பயணம் செல்ல வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறக்கும்.

மீன ராசி

மீன ராசிக்கு என்ற மன மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்துடன் நல்ல நேரம் செலவழிப்பீர்கள். பயணங்களில் மகிழ்ச்சியாக அனுபவிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சில முக்கிய புள்ளிகளின் தொடர்பு ஆளுக்குச் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.