பிரேசிலில் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி நூறு வயது முதியவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இன்றைய அவசர யுகத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவது என்பது தனியார் துறைகளில் பணியாற்றும் பலருக்கு நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறது.

அப்படியிருந்தும் பிரேசிலில் நூறு வயதை தொட்ட நபர் 84 ஆண்டுகளாக வேறு நிறுவனத்திற்கு மாறாமல், ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்திருக்கிறார்.
இதற்காக அவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
