மீண்டும் ஏற்படவுள்ள எரிபொருள் தட்டுப்பாடு!

0
435

இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்களில் இருந்து இந்த வார இறுதிக்குள் எரிபொருளை தரையிறக்கத் தொடங்காவிட்டால் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடும், எண்ணெய் வரிசைகளும் ஏற்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அதிகாரிகள் தொடர்ந்து எரிபொருளை விடுவித்து வருவதாகவும், இன்னும் சில தினங்களில் இரண்டு கப்பல்களும் விடுவிக்கப்படாவிட்டால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நிறுவனத்திற்குச் சொந்தமான 37,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான டீசல் மற்றும் 37,000 மெற்றிக் தொன்களுக்கும் அதிகமான பெட்ரோலை ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் பல நாட்களாக கொழும்பு கடற்கரையில் நங்கூரமிட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு கப்பல்களையும் விடுவிப்பதற்கான டொலர்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவை காலாவதியானால் நாட்டின் எண்ணெய் வளம் குறைய வாய்ப்புள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.