விற்பனை வரி அதிகரிப்பது தான் வலி – அலி சப்ரி

0
290

இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் விற்பனை வரியை அதிகரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என நிதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு வரிகளை அதிகரிப்பதற்கான கடினமான தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத்தை குறைப்பதற்கு அவசியமான வழிமுறையைக் கண்டறிய வேண்டும்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் பெறுமதி சேர் வரியை 8 வீதமாகக் குறைத்தமை அரசாங்கம் மேற்கொண்ட முக்கிய தவறாகும்.

இதற்கமைய பெறுமதி சேர் வரியை 13 அல்லது 14 வீதமாக அதிகரிக்க வேண்டும். எதிர்வரும் 8 மாதங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியமாக உள்ளது.

எதிர்வரும் ஆண்டளவில் இலங்கை தனது சர்வதேச கடன் கொடுப்பனவுகளை மீள ஆரம்பிக்கும் என தான் நம்புவதாகவும் நிதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry)  தெரிவித்துள்ளார்.