37 ஆயிரம் அடி உயரத்தில் திருமணம் செய்த ஜோடி!

0
362

விமானத்தில் எதிர்பாராத வகையில் ஒரு தம்பதிக்கு 37 ஆயிரம் அடி உயரத்தில் திருமணம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வசித்து வருபவர்கள் ஜெரேமி சால்டா(Jeremy Salta) மற்றும் பாம் பேட்டர்சன்(Pam Patterson).

இவர்கள், உலகின் திருமண நகரம் என பெயர் பெற்ற லாஸ் வேகாஸ் நகரில் கடந்த 24ஆம் திகதி தங்களது திருமணம் நடைபெற வேண்டும் என விரும்பியுள்ளனர்.

அதற்காக தயாராகி வந்துள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நாளில் லாஸ் வேகாஸ் செல்லும் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால், திட்டமிட்டபடி தங்களது திருமணம் நடைபெறாமல் போய் விடுமோ என்று அச்சமடைந்து உள்ளனர்.

எப்படி வேகாஸ் நகருக்கு செல்ல போகிறோம் என அவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தனர். இதனை லாஸ் வேகாசுக்கு செல்ல கூடிய கிறிஸ் என்ற மற்றொரு பயணி கேட்டு கொண்டே இருந்துள்ளார். அவர் அந்த தம்பதியிடம் உங்களுக்கு நான் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Gallery

3 பேரும் ஆன்லைனில் தேடி சவுத்வெஸ்ட் விமானம் ஒன்றில் கடைசி 3 இருக்கைகளை முன்பதிவு செய்தனர். ஒருவழியாக விமானத்தில் ஏறினர். திருமண உடையில் பேட்டர்சன் இருந்துள்ளார். இதனை விமானி கவனித்து உள்ளார்.

அவரிடம் பேட்டர்சன் தங்களுக்கு நடந்த விசயங்களை பற்றி கூறியதுடன், நகைச்சுவைக்காக விமானி கில்லிடம், நாங்கள் விமானத்தில் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்று கூறியுள்ளார்.

அந்த விமானியும் சற்றும் யோசிக்காமல், திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சம்மதித்து விட்டார். இதனால், பேட்டர்சன் ஆச்சரியத்தில் மூழ்கி போனார். அனைத்து வேலைகளும் தடபுடலாக நடந்தன.

விமானத்தின் கழிவறையில் இருந்த பேப்பரை பயன்படுத்தி விமானத்தில் திருமண விழாவுக்கான தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதே விமானத்தில் பயணித்த தொழில்முறை புகைப்படக்காரர் ஒருவர் புகைப்படங்களை எடுத்து தள்ளினார்

இதேபோன்று மற்றொரு நபர், பழைய நோட்டு ஒன்றை அனைவரிடமும் வழங்கி புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கான கையெழுத்துகளை வாங்கினார். விமான பணிப்பெண்ணாக இருந்த ஜூலி, மணமகள் தோழியாக மாறினார்.

Gallery

நடுவானில் 37 ஆயிரம் அடி உயரத்தில் இந்த தம்பதியின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

இந்த பதிவை சவுத்வெஸ்ட் விமான நிறுவனம் நேற்று பகிர்ந்து உள்ளது. அதேவேளை ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்துள்ளதோடு விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

Gallery