யாழ்.வல்வை சந்திக்கு அருகில் தடம்புரண்ட வாகனம்!

0
58

யாழ்ப்பாணம் வல்வை சந்திக்கு அருகில் காப் ரக வாகனம் ஒன்று தடம்புரண்டுள்ளது.

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுவதை தவிர்க்கும் நோக்கில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த காப் ரக வாகனம் எதிரில் இருந்த மரத்துடன் மோதுண்டு தடம்புரண்டுள்ளது.

குறித்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் எதிரில் வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர்கள் இரண்டு கைகளையும் விட்டு சாகசம் செய்ய முற்பட்டதன் காரணமாகவே குறித்த விபத்து நிகழ்ந்தது.

மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.