தங்காலையில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்!

0
43

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டை என கருத்தப்படும் தங்காலையில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தங்காலையில் உள்ள மக்கள் மஹிந்தவின் விசுவாசிகளாக இருப்பதாகவும், அவர்கள் எப்போதும் தன்னுடன் நிற்பார்கள் எனவும் பிரதமர் மஹிந்த கூறிவந்தார்.

இந்த நிலையில் இன்று , அங்கு பெருமளவு மக்கள் ஒன்றுகூடி மஹிந்த உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் பிரதானி சட்டதரணிகளும் இந்த ஆர்ப்பாடத்தில் இணைந்த நிலையில் , மஹிந்தவின் கோட்டை இன்று சரிந்துவிட்டதாக பரவலாக பேசப்படுகின்றது