சீனாவை தொடர்ந்து அமெரிக்காவிற்கும் பரவிய தொற்று!

0
546

அமெரிக்காவின் மேற்கு மாநிலமான கொலராடோவில் வசிக்கும் கோழி பண்ணையாளருக்கு பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சீனாவில் நான்கு வயது சிறுவன் ஒருவனுக்கு பறவை காய்ச்சல் கண்டரியப்பட்டதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் வெளியிட்டது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் 4 வயது சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இந்த காய்ச்சலின் அறிகுறிகள் பறவை காய்ச்சலின் அறிகுறிகலாக இருந்துள்ளது. அதன்பின்னர் பறவை காய்ச்சலின் H3N8 திரிபு முதல் முறையாக மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ளது என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது. சிறுவன் வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் காகங்கள் மூலம் பறவை காய்ச்சல் பரவி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் சிறுவனுடன் தொடர்பில் இருந்த யாருக்கும் காய்ச்சல் பரவவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது. தொடந்து ,H3N8 வைரஸ் மாறுபாடு மனிதர்களை பாதிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை என்றும், H3N8 பறவை காய்ச்சல் வைரஸ் மக்களிடையே பரவுதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் மேற்கு மாநிலமான கொலராடோவில் வசிக்கும் கோழி பண்ணையாளர் ஒருவருக்கு புதிய வகை பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு பறவைகள் மற்றும் விலங்குகளை பாதிக்கும் H5N1 என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கொலராடோ மாகாண நிர்வாகம் கூறியுள்ளது.

இதனையடுத்து அடையாளம் காணப்பட்ட நபரை தனிமைப்படுத்தியுள்ள சுகாதாரத்துறையினர்,அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது