பொருளாதார நெருக்கடி உச்ச கட்டத்தை அடையும் அபாயம்!

0
30

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை எதிர்வரும் மாதங்களில் மேலும் மோசமடையும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

எமது பொருளாதார நெருக்கடி நிலைமை மேலும் மோசமடையலாம். தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கான கடன், டொலர் பற்றாக்றை, வருமானம் குறைந்தமை மற்றும் செலவுகள் அதிகரித்துள்ளமையே இதற்கு பிரதான காரணம் என கூறியுள்ளார்.