இலங்கையின் நிலை குறித்து கவலைப்படும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்!

0
369
Steven Horsford, former Representative for Nevada's 4th, during in interview on Wednesday, Jan 24, 2018. (Jeff Scheid/The Nevada Independent)
இலங்கையின் வளங்களை சூறையாடியவர்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் Steven Horsford தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான Steven Horsford அண்மையில் இலங்கையர்கள் சிலரை சந்தித்த பேசிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வளங்கள் சூறையாடப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பிலான தகவல்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை ஆட்சி செய்யும் ஒரு குடும்பம் காரணமாக இலங்கை வங்குரோத்து நிலையினை எதிர்நோக்கியுள்ளமை தொடர்பாக அமெரிக்க தலைவர்களை தௌிவுபடுத்துவதாக Steven Horsford உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் வளங்கள் சூறையாடப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை அமெரிக்க காங்கிரஸ் சபையுடன் இணைந்து அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.