அந்நியச் செலாவணி இன்மையால் மூடப்படும் அரச திணைக்களங்கள்!

0
470

அந்நியச் செலாவணி இன்மையால் எங்களுடைய  டீசல், பெட்ரோல் இறக்குமதி என்பதும் உள்ளூர் உற்பத்திகள் இப்பொழுது மட்டுப்படுத்தப்பட்டு  நாட்டின் முதுகெழும்பான விவசாயத் துறைக்கூட பாரிய பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. 

கடந்த இரண்டு மாதங்களில் எங்களுக்கான அரிசிகூட பற்றாக் குறையாகவே காணப்படுகின்றது என  இலங்கையின் முன்னாள் வங்கி முகாமையாளர் குருசுவாமி  சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.  

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இன்று பாணைக் கூட அதிக விலைக் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  பாணை தயாரிக்கின்ற கோதுமை மா இறக்குமதி இன்மையினால் கடைகளில் கோதுமை மா கிடையாது எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார். 

தற்போதைய சூழலின் காரணமாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் கூட விமானங்களை  வாடகைக்கு எடுப்பதில் சிக்கல் நிலையை எதிர்நோக்கியிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.