கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை!

0
683

பிரித்தானியாவில் நிலுவையில் உள்ள விசா விண்ணப்பங்கள் அனைத்தையும் முடிக்காவிட்டால் கடவுச்சீட்டு அலுவலகத்தை தனியார் மயமாக்கிவிடப்போவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான கோடை விடுமுறைகள் தடைபடும் அளவிற்கு கடவுச்சீட்டு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் , ஆவணங்களை புதுப்பிப்பதில் தாமதம் ஏற்படுவதால் , வரும் மாதங்களில் வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் அதை இழக்க நேரிடும் என்றும் பிரதமர் (Boris Johnson)  குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் விண்ணப்பங்கள் ஒப்புதல் பெறுவதற்கு தாமதமாவதால், விரைவாக பாஸ்போர்ட்டை பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெரும்பாலான மக்கள் கூடுதல் கட்டங்களை செலுத்தும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் செவ்வாயன்று அமைச்சரவைக்கு அளித்த கருத்துகளில்   ஓட்டுநர் மற்றும் வாகன உரிமம் வழங்கும் நிறுவனம் மற்றும் சில அமைப்புகளை தனியார்மயமாக்கலாம் என்று பிரதமர் ஜான்சன் (Boris Johnson)  அறிவித்தார்.

அத்துடன் பொதுத்துறையா, தனியார் துறையா என்பது எனக்கு கவலையில்லை என தெரிவித்த பிரதமர் பொறிஸ் (Boris Johnson), பொதுமக்களுக்கு மதிப்பு மற்றும் நல்ல சேவையை வழங்குவது மட்டுமே தனது ஒரே நோக்கமெனவும் கூறியுள்ளார்.