எதிர்பார்ப்புக்களின் மத்தியில் நாளைய தினம்!

0
61

அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கு பல அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட சுமார் 1,000 தொழிற்சங்கங்கள் நாளையதினம் (27-04-2022) ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

இதேவேளை, சில சுகாதார சேவை சங்கங்கள், ஆசிரிய அதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமது தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ளதாக ஆசிரிய அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.