அறைக்குள் தூங்கும் பழக்கமே இல்லாத மன்னன்; நித்தியானந்தாவின் அலப்பறைகள் !

0
535

பரபரப்பு பஞ்சமில்லாத நித்தியானந்தாவின் கைலாசா நாடு தொடர்பில் அவரே கூறிய தகவலொன்று வெளியாகியுள்ளது. அதாவது மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமே நித்தியானந்தாவுக்கு இல்லையாம்.

அத்துடன் நித்தியானந்தா ஊஞ்சலில் படுத்து கொண்டு பனி படர்ந்த மலையையும் கடலையும் ரசிப்பாராம் என கூறியுள்ளார். பொலிசாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா கைலாசா எனும் தீவை விலைக்கு வாங்கிவிட்டதாகவும் அங்குதான் தான் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த கைலாசா எனும் தீவு எந்த கண்டத்தில் இருக்கிறது என்பது கூட தெரியவில்லை. இந்த நிலையில் கைலாசா நாட்டுக்கு தான் அதிபர் என நித்தியானந்தா பிரகடனப்படுத்திக் கொண்டதுடன், கைலாசாவில் மக்கள் குடியேற பாஸ்போர்ட், கைலாசாவுக்கான தனிக்கொடி, கரன்சி ஆகியவற்றையும் நித்தியானந்தா அறிமுகப்படுத்தினார்.

கொரோனா, லாக்டவுன், பொருளாதார நெருக்கடி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என எதை பற்றியும் கவலைப்படாமல் நித்தியானந்தா தனி உலகத்தில் வாழ்ந்து வருவதால் கைலாசாவுக்கு செல்ல இளைஞர்கள் விருப்பமனுக்களை தாக்கல் செய்துவருவதாக கூறப்படுகின்றது. அதோடு கைலாசாவில் தொழில் தொடங்கவும் பலர் விண்ணப்பித்துள்ளார்களாம்.

இந்த நிலையில்தான் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். அதாவது கைலாசாவில் நித்தியானந்தாவின் அறைக்கு கதவுகளே கிடையாதாம். மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமே நித்தியானந்தாவுக்கு இல்லையாம். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தனது அறைக்கு வந்து தன்னுடன் எதை பற்றி வேண்டுமானாலும் கலந்துரையாடலாம் என்கிறார் நித்தியானந்தா.

அவர் ஊஞ்சலில் படுத்து கொண்டு பனி படர்ந்த மலையையும் கடலையும் ரசிப்பாராம். அதேவேளை எனது வீடியோவை பார்க்கும் மக்கள் பனிமலையும் கடலும் ஒன்றாக எங்கே இருக்கிறது என கூகுளில் தேட ஆரம்பித்திருப்பார்கள் எனவேறு  நித்தியானந்தா கிண்டல் செய்துள்ளார்.