ஆங் சான் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது இராணுவ நீதிமன்றம்!

0
556

மியான்மரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி எனக் குறிப்பிட்டு, அந்த நாட்டு இராணுவ நீதிமன்றத்தினால் புதன்கிழமை (27) 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சதிப்புரட்சி நடந்த இரவு முதல் சூகி இராணுவ காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

76 வயதான நோபல் பரிசு பெற்ற இவர், பல தசாப்தங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.

சமீபத்திய வழக்கில், அவர் 600,000 டொலர்கள் பணம் மற்றும் தங்கக் கட்டிகளை லஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

நீதிமன்றம் கூடிய சில நிமிடங்களில் நீதிபதி தீர்ப்பை வழங்கியுள்ளார்.

சூகி 11.4 கிலோ தங்கம் மற்றும் ரொக்கக் கொடுப்பனவுகளை அவருக்கு எதிரான சாட்சியாக மாறிய, முன்னாள் யாங்கூன் முதலமைச்சர் ஃபியோ மின் தெய்னிடம் இருந்து பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்ட வழக்கிலேயே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.