கனடாவில் இருந்து சென்னை சென்ற ஈழத் தமிழ் இளைஞன் மரணம்!!

0
75

அந்த இளைஞனின் பெயர் மகிந்தன் தயாபரராஜா. 35 வயது. கனடா பிரஜை.

Gallery

சென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் வழிபாடு செய்வதற்காக கடந்த 13.04.2022 அன்று தனது தாயாருடன் கனடாவில் இருந்து சென்னை வந்திருந்தார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த இளைஞன், தேணீர் வாங்குவதற்காக விடுதியை விட்டு வெளியே வந்தபோது காணாமல் போயிருந்தார்.

மேல்மருவத்தூரில் வைத்து காணாமல்போன அந்த இளைஞன் 3 நாட்களின் பின்னர் மேல் மருவத்தூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் வீதியோரம் வீழ்ந்து கிடந்துள்ளான்.

16.04.2022 மாலை சுமார் பகல் 12 மணியளவில் வீதியோரத்தில் இவர் மயக்கமடைந்த நிலையில் வீதியால் சென்ற மருத்துவர் ஒருவரும், அங்கு இருந்தவர்களும் அந்த இளைஞனை தமிழக அரசின் இலவச நோயாளர் காவு வண்டி எண் 108 இற்கு தகவல் தெரிவித்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் 17 ஆ ம் திகதி அதிகாலை 5 மணி அளவில் இவர் இறந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த இளைஞனை மேல்மருவத்தூரில் இருந்து செங்கல்பட்டுவரை அழைத்துச் சென்றது யார் என்பது இதுவரை தெரியவரவில்லை.

பணம் ஏதாவது பறிபோனதா, அல்லது பணத்திற்காக அந்த இளைஞன் கடத்தபட்டிருந்தாரா என்பதும் தெரியவரவில்லை.

தற்போது அந்த இளைஞனின் உடல் கனடாவுக்கு கொண்டு செல்வதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Gallery