ரஷ்ய அதிபர் புடினுடன் ஐ.நா.பொதுச்செயலாளர் இன்று பேச்சுவார்த்தை!

0
236

ரஷ்யா சென்றுள்ள ஐநா.சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டாரஸ்(Antonio Guterres) இன்று அதிபர் புடினுடன்(Vladimir Putin) பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

முன்னதாக அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவுடன்(Sergei Lavrov) மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

60 நாட்களைக் கடந்தும் நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்தி சமாதானம் காண்பதற்கான வழிகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குட்டாரஸ்(Antonio Guterres), போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகள் மூலமாக அமைதித் தீர்வு காண்பதற்கு ஐநா.சபை மிகுந்த முயற்சிகள் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

இதன் மூலம் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களை குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் போரால் உருக்குலைந்துவிட்ட மரியுபோல் நகரில் இருந்து மக்களை வெளியேற்றவும் மனிதாபிமான உதவிகளை வழங்கவும் தயாராக இருப்பதாகவும் குட்டாரஸ்(Antonio Guterres) தெரிவித்தார்.