அலரிமாளிகையின் முன் ஆர்ப்பாட்டம்!

0
234

அரசாங்கத்திடம் நீதி கோரி அலரி மாளிகை முன்பாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாகப் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலரி மாளிகையைச் சுற்றி இன்றும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே அவ்விடத்திலிருந்து பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அலரிமாளிகைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நேற்றையதினம் மைனாகோகம என்ற பெயரில், தங்களின் போராட்டக் களத்தை அடையாளப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.