கனடாவிலிருந்து இந்தியா வந்த இளைஞர் சுட்டுக்கொலை

0
49

கனடாவிலிருந்து ஒரு வாரம் முன்பு இந்தியா திரும்பிய இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பஞ்சாபைச் சேர்ந்த Jatinderpal Singh (25) என்ற இளைஞர் சென்ற வாரம்தான் கனடாவிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணியளவில், Jatinderpalம் அவரது மூன்று நண்பர்களும் உணவகம் ஒன்றில் உணவருந்திவிட்டு அமிர்தசரஸுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவர் Jatinderpal மற்றும் அவரது நண்பர்கள் பயணித்த காரை நோக்கி சரமாரியாக சுட்டிருக்கிறார்கள்.

அப்போது ஒரு குண்டு Jatinderpalஇன் விலாவில் பாய்ந்திருக்கிறது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையிலும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த துயர சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார், அந்த மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகிறார்கள்.