பூ கட்ட நூல் கேட்ட சிறுமி…. “பாலியல் தொல்லை கொடுத்து”….. தலையை துண்டித்த கொடூரன்…

0
453

2018 இல் பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருக்கக்கூடிய சுந்தரபுரம் பகுதியில் ஒரு வீட்டில் பூ கட்டுவதற்காக நூல் வாங்க சென்ற 13வயது சிறுமியிடம் அங்கிருந்த 26 வயது வாலிபர் தினேஷ் குமார் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.. இதையடுத்து அந்த குழந்தை தனது பெற்றோரிடம் நடந்ததை சொல்வதற்காக செல்ல முயன்ற போது, உடனடியாக அந்த சிறுமியை பிடித்து கழுத்தை அறுத்து, தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை, பாலியல் சீண்டல், தீண்டாமை தடுப்பு என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தினேஷ்குமாரை கைது செய்துள்ளனர்.. இதன் தொடர்ச்சியாக நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு இந்த வழக்கு விசாரணையானது அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது..

கடந்த 2019ஆம் ஆண்டு இந்த வழக்கு போக்ஸோ நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளி தினேஷ்குமார் குற்றம் செய்தது 100% உறுதி செய்யப்பட்டது.. நீதிபதி முருகானந்தம் தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார்.. போக்ஸோ நீதிமன்றம் தொடங்கப்பட்ட பிறகு சேலத்தில் விதிக்கப்பட்ட முதல் தூக்கு தண்டனை இதுவாகும்..

மேலும்  தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூபாய் 25 ஆயிரம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. இந்த தீர்ப்பு நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.