தேநீர் அருந்துவதற்காக ரயிலை நடுவழியில் நிறுத்திய டிரைவர் – ஆச்சரியத்தில் பயணிகள் !!

0
30

குவாலியரில், குவாலியர்-பராவ்னி எக்ஸ்பிரஸ் ரயில் பீகாரில் உள்ள சிவன் ரயில் நிலையம் அருகே திடீரென நின்றது. அப்போது லெவல் கிராசிங் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அனைவரும் சாலையில் காத்திருந்தனர்.

கிரீன் சிக்னல் விழுந்த பிறகும் ரயில் நகரவில்லை. இதனால் என்ன நடக்கிறது என தெரியாமல் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்தனர். அப்போது உதவி லோகோ பைலட் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ வாங்கி கொண்டு இருப்பது தெரிந்தது. உதவியாளர் டீயுடன் ரயிலில் ஏறியதும் ரயில் புறப்பட்டது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு வைரலாக பரவியது.

பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்ட ரயிலின் லோகோ பைலட் மற்றும் உதவி லோகோ பைலட் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.