பணம் கொடுக்க முடியாததால் காதலியை கைவிட்ட காதலன்

0
542

வடமேற்கு சீனாவில் பல ஆண்டுகள் காதலித்த பெண்ணை திருமணம் புரிவதற்கு மணப் பெண்ணுக்கான 300,000 யுவான் பணத்தை வழங்க முடியாததால் காதலன் அந்தப் பெண்ணை கைவிட்டுள்ளார்.

பெண்ணின் உடல் மற்றும் உழைப்பை உரிமையாக்குவதற்காகவே மணப்பெண்ணுக்கு பணம் செலுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

எனினும் கன்சு மாகாணத்தில் வசிக்கும் குயின் என்ற ஆடவர் வருடாந்தம் 20,000 யுவான் வருமானத்தை பெறும் நிலையில் மணப்பெண்ணின் விலையாக நிர்ணயிக்கப்பட்ட தொகையை சேகரிக்க 15 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண சடங்கில் சீர்திருத்தங்களை கொண்டுவர சீன அரசு முயன்றபோதும் மணமகள் விலை சீன சமூகத்தில் தொடர்ந்து அதிகமாக உள்ளது. குறிப்பாக கிராமப் பகுதிகளில் இந்த சிக்கலால் பலரும் தொடர்ந்து திருமணம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.