கோட்டாபய – மகிந்த இடையில் உச்சக்கட்ட முறுகல்! அம்பலமான உண்மைகள்

0
39

தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் எவருக்கும் அடுத்த தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாக முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு நெருக்கமானவர்கள் குழுவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“உங்களுக்கு வாக்குகள் இல்லை. நீங்கள் அனைவரும் என்னாலேயே வெற்றி பெற்றீர்கள். எனது புகைப்படத்தை பெரிதாக வைத்தும், எனது புகைப்படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டியும் அனைவரும் வாக்கு கேட்டனர்.

2015லும் 2020லும் இதே நிலைதான் இருந்தது. எனவே பிரதமரை எப்படி அகற்றி தேர்தலில் வெற்றி பெறுவது என்று பார்ப்போம்!” என்று அவர் கூறியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.