லெபனானில் நடத்தப்பட்ட பீரங்கி குண்டு தாக்குதல்!

0
33

லெபனானில் இருந்து எல்லைக்கு அப்பால் திறந்தவெளி பகுதி மீது ரொக்கெட் குண்டு வீசப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாக தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த ரொக்கெட் குண்டு வந்த திசையை நோக்கியும் உட்கட்டமைப்பு ஒன்றை இலக்கு வைத்தும் தெற்கு லெபனானின் திறந்த வெளியை நோக்கி பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டது என்று இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு லெபனான் எல்லை பகுதியில் உள்ள ஐ.நா அமைதிகாக்கும் படைகளின் நிலைகளில் சைரன் ஒலி எழுப்பப்பட்டதாக லெபனான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அங்கு லெபனான் படைகள் அனுப்பப்பட்டிருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

எனினும் எல்லையில் இரு பக்கத்திலும் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்படவில்லை.

லெபனானில் இருந்து இடம்பெற்ற ரொக்கெட் தாக்குதலின் பின்னணியில் உள்ள குழு யார் என்பது உறுதி செய்யப்படவில்லை.