யாழில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 8 பெண்கள் கைது!

0
35

யாழ். அரியாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குடும்ப பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, குறித்த பெண் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார். அவர் கஞ்சா போதைப்பொருளை வீட்டில் மறைத்துவைத்து விற்பனை செய்யும்வேளை, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொதியினையும் பொலிஸார் மீட்டனர்.

மேலும் கைது செய்யப்பட்ட பெண் அரியாலை பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை யாழில்  கடந்த 6 மாதங்களுக்குள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 பெண்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். 

யாழில் மோசமான செயலில் ஈடுபட்ட 8 பெண்கள் கைது! - ஜே.வி.பி நியூஸ்