தினமும் 10 ஆயிரம் டொலர்கள் அபராதம் – ட்ரம்ப்புக்கு வந்த சோதனை!

0
47

அமெரிக்காவில் வழக்கு ஒன்றில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்புக்கு அமெரிக்காவில் பல்வேறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. அவரது தொழில் நிறுவனம் தொடர்பான வழக்கு ஒன்று நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் ட்ரம்ப் தரப்பு ஆவணங்களை அளிக்க முதலில் மார்ச் 3ம் திகதி வரையிலும், பின்னர் மார்ச் 31ம் திகத வரையிலும் கால அவகாசம் நீடிக்கப்பட்டது. ஆனாலும் ட்ரம்ப் ஆவணங்களை சமர்பிக்கவில்லை.

இதனால் ட்ரம்ப் தரப்பு ஆவணங்களை சமர்பிக்கும் வரையிலும் தினமும் 10 ஆயிரம் டொலர்களை அபராதமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.