பாப்பரசர் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!

0
367

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினருடன் பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று திங்கட்கிழமை தனது நெருக்கத்தை வெளிப்படுத்தினார்,

அத்துடன் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணருமாறு இலங்கையின் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்,

இதுவே நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்;

கொழும்பின் கர்தினால் மல்கம் ரஞ்சித், அவர் தலைமையிலான 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியான மற்றும் உயிர் பிழைத்தவர்களின் குடும்பங்களின் பிரதிநிதிகள் உட்பட இத்தாலியில் பணிபுரியும் சுமார் 3,500 இலங்கை கத்தோலிக்கர்கள் மத்தியில் பாப்பரசர் உரையாற்றினார்.

இலங்கையில், 2019, ஏப்ரல் 21ஆம் திகதியன்று 3 தேவாலயங்கள் மற்றும் 3 விருந்தகங்கள் மீது ஒருங்கிணைந்த நிலையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், குறைந்தது 45 வெளிநாட்டினர் உட்பட சுமார் 270 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

நீர்கொழும்பின் புறநகரில் உள்ள புனித செபாஸ்டியன் கத்தோலிக்க தேவாலயம்,கொழும்பின் கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய மதத்தலங்கள் மீதே தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

குறித்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் விசாரணைகளை மூடிமறைப்பதாகக் குற்றஞ்சாட்டி, கர்தினால் மல்கம் ரஞ்சித்; குரல் கொடுத்து வருகிறார்.

இந்தநிலையில் வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில், இலங்கைக் குழுவினர் முன் பேசிய பாப்பரசர் பிரான்ஸிஸ், 2019 உயிர்த்த ஞாயிறுத்; தினத்தில் விதைக்கப்பட்ட சோக நிகழ்வுகளின் ஆண்டு நிறைவைக் குறிக்க கூடியிருப்பதாக குறிப்பிட்டார்

இலங்கையில் ஏற்பட்ட இந்த இறப்புக்கள்; மற்றும் பயங்கரவாதம் என்று தெரிவித்தார்.

எனவே தயவுசெய்து, நீதியின் மீதுள்ள அன்பினால், உங்கள் மக்கள் மீதான அன்பினால், இந்த நிகழ்வுகளுக்கு யார் காரணம் என்பதை ஒருமுறை தெளிவுபடுத்துங்கள் என்று இலங்கை அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

இதுவே “இது உங்கள் மனசாட்சிக்கும் உங்கள் நாட்டிற்கும் அமைதியைத் தரும்” என்று அவர் தெரிவித்தார்

இதேவேளை 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளதையும் புனித பாப்பரசர் சுட்டிக்காட்டினார்;