இலங்கையின் வறுமை விகிதம் மேலும் அதிகரிக்கலாம்!

0
349

2019 இல் 10வீதமாக இருந்த இலங்கையின் வறுமை விகிதம் 2022 இல் 11.7வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

அதிக கடன் அளவுகள் காரணமாக இறக்குமதி சுருக்கம் மற்றும் முதலீட்டாளர்களின் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது

உலக வங்கி, தமது தெற்காசியப் பிராந்தியம் தொடர்பான அதன் புதுப்பிப்பில் இதனை தெரிவித்துள்ளது

கொரோனா தொற்றுநோய் காரணமாக, 2020 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 3.6 சதவிகிதம் சுருங்கியது,

இதுவே வறுமை விகிதத்தை 11.7 சதவிகிதமாக உயர்த்தியது.

உலக வங்கியின் ஏப்ரல் 2022 இன் இலங்கைக்கான நுண்ணிய வறுமைக் கண்ணோட்டத்தின் புதுப்பிப்பின்படி, உயர்த்தப்பட்ட வரிகள் மற்றும் வெளி இடர்பாடுகள் மற்றும் சவாலான அரசியல் சூழ்நிலை ஆகியவை பொருளாதாரக் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடு 2022 மற்றும் அதற்கு அப்பால் வெளிப்புற நிதி இடைவெளியை எதிர்கொள்கிறது என்றும் உலக வங்கி குறிப்பி;ட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கை அதன் பாதிப்புகளின் கட்டமைப்புக்களை நிவர்த்தி செய்ய வேண்டும்.

இதற்கு குறிப்பாக உள்நாட்டு வருவாய் திரட்டலை வலுப்படுத்துவதன் மூலம் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும்

பணவீக்கத்தின் மீதான அழுத்தங்களைக் கட்டுப்படுத்த நிதி ஒருங்கிணைப்பு இறுக்கமான பணவியல் கொள்கையுடன் தேவைப்பட்டாலும், உலகளாவிய வளர்ச்சி கடன் வழங்குபவர், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான சாத்தியமான விடயங்களை இலங்கை கண்டறிய வேண்டும் என்றும் உலக வங்கி பரிந்துரைத்துள்ளது.

இதன் மூலமே ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான தாக்கங்களைக் குறைக்கமுடியும் என்று உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.