பிரமாண்டமான காகத்துடன் ஆரம்பமான போராட்டம்!

0
29

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும், இந்த அரசு வீடு செல்ல வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி, பிரமாண்டமான காகத்துடன் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இந்த பாத யாத்திரை போராட்டம் இன்று கண்டியில் ஆரம்பமானது. ‘சுதந்திரத்துக்கான போராட்டம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் முற்பகல் 9 மணிக்கு கண்டியில் ஆரம்பமான இந்த பேரணி மே முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.

இந்நிலையில் பேரணியில் கலந்துகொண்டவ்ரகள் ராஜபக்சக்களுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். போராட்டத்தில் காகம் ஒன்று பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளதுடன், அதன் கழுத்தில் சிவப்பு சாலவை ஒன்றும் போடப்பட்டுள்ளது.

அதேவேளை காலி முகத்திடலில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பக்கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று 19 நா:ளாகவும் தொடர்கின்றது.

மேலும் நாட்டில் ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை கா….கா…. என போராட்டக்காரர்கள் கூவி அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.