நிவாரணம் வழங்குவதே முதல் எம் பணி – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

0
28

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் நிவாரணம் வழங்குவதே முதல் பணி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கள் தொடர்பான பொது மாநாட்டில் உரையாற்றிய அவர், திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க தாம் தயார் நிலையில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 1994 ஆம் ஆண்டிலிருந்து பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமாக உள்ளனர்.

எங்களது அரசாங்கத்தின் முதல் பணி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் நிவாரணத் திட்டத்தை செயல்படுத்துவதுதான் என அவர் தெரிவித்துள்ளார்.