ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய ஒரு வருட காலத்திற்க்கு மேல் ஆகலாம்! சுமந்திரன் தெரிவிப்பு

0
24

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர ஒரு வருட காலம் செல்லும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வது குறித்து டுவிட்டர் பயனாளியின் கேள்விக்கு பதிலளித்த அவர் இதனை கூறியுள்ளார்.

“குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்ய, எந்த அடிப்படையில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும்.

குற்றச்சாட்டுகள் உண்மையென உச்ச நீதிமன்றம் கண்டறிந்தால், அதன் அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அதன் பிறகுதான் பதவி நீக்கம் வாக்கெடுப்பு நடத்தப்படும். ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை.

இதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக வெளியான செய்தியும் அவர் மறுத்துள்ளார்.