கனடாவில் காவல்துறை தலைவர் குற்றவாளி என அறிவிப்பு!

0
189

கனடாவில் வேலியே பயிரை மேய்ந்தது போல உடன் பணிபுரிந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட உயர் பொலிஸ் அதிகாரி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளார்.

Wikwemikong காவல்துறை தலைவராக இருந்தவர் டெரி மெக்காப்ரே. இவரிடம் கடந்த 2019ஆம் ஆண்டு வந்த சக பெண் ஊழியர் தனது தனிப்பட்ட பிரச்சனை குறித்து பேசி அழுதுள்ளார்.

அப்போது காவல்துறை தலைவர் என்ற அடிப்படையில் பிரச்சனையை தீர்ப்பது குறித்து பேசாமல் அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார் டெரி.

இது தொடர்பான புகாரில் பொலிசார் விசாரித்து வந்த நிலையில் கடந்தாண்டு ஜனவரி மாதம் டெரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்த டெரி இது புனையப்பட்ட வழக்கு என கூறினார்.

ஆனால் சாட்சியங்கள் மற்றும் விசாரணைகள் அடிப்படையில் டெரி மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

அவருக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பான விசாரணை குறித்து மே 10ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.