விண்வெளியை குப்பையாக்குகிறாரா எலான் மஸ்க்?

0
429

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயற்கைக்கோள் இணையத் திட்டத்திற்காக மேலும் 53 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள் அடிப்படையிலான நேரடி இணைய சேவை திட்டத்திற்காக குறைந்த எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், ஸ்பேஸ்எக்ஸ் முதன்முறையாக ஒரே நேரத்தில் 60 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.

அதன்பிறகு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தற்போது மேலும் 53 ஸ்டார்லிங் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் புளோரிடாவில் உள்ள கேப் கனாவரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. இதுவரை, SpaceX சுமார் 1,915 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.

அவற்றில் சில செயற்கைக்கோள்கள் செயலிழந்ததாக கூறப்படுகிறது. விண்வெளியை மேலும் மாசுபடுத்தும் வகையில் ஸ்பேஸ் எக்ஸ் ஒரு சிறிய செயற்கைக்கோளை ஏவலாம் என்று பல விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.