மீண்டும் எகிறியது சீமெந்து விலை

0
465

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடை ஒன்றின் விலையை 400 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

அதன்படி, சில சிமெந்து நிறுவனங்கள் ஒரு மூட்டை சீமெந்து விலையை ரூ.2,750 ஆகவும், சில நிறுவனங்கள் ரூ.2850 ஆகவும் விலை உயர்த்தியுள்ளன.

இந்த விலை அதிகரிப்பானது நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என சீமெந்து உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.