19 ஆம் திருத்தச் சட்டத்தை கையளிக்கும் பிரதமர்: 21 ஆம் திருத்தச் சட்டத்திற்கான அத்திவாரம்!

0
26

20ஆம் திருத்தச் சட்டத்தினை நீக்கி, 19 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளார் பிரதமர் மகிந்த ராஜபக்ச.

இதேவேளை, சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினர் இணைந்து சபாநாயகரிடம் கையளித்த யோசனை திட்டங்களும் இன்று அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதன்படி, சகல திட்டங்களையும் ஆராய்ந்து 20ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி புதிய அம்சங்களுடன் 21 ஆம் திருத்தச் சட்டத்தை எதிர்காலத்தில் அமைச்சரவையின் ஊடாக நாடாளுமன்றில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.