புனித பாப்பரசரை சந்திக்கும் பேராயர்!

0
32

வத்திக்கானில் உள்ள புனித பாப்பரசரை, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று சந்திக்கவுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழுவினருடன் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த 21ம் திகதி ரோம் நகரில் உள்ள வத்திக்கானுக்கு புறப்பட்டார்.

அண்மையில் திருத்தந்தையுடனான சந்திப்பின் போது கர்தினால் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று புனித பேதுரு பேராலயத்தில் (At St. Peter’s Basilica) நடைபெறும் விசேட ஆராதனையிலும் கலந்து கொள்ள உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.