நம்பிக்கையில்லா பிரேரணை வரைவை முன்னெடுக்கும் எம்.ஏ.சுமந்திரன்!

0
30

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான வரைவினை தயாரிக்கும் செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுக்கவுள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் விரைவில் கொண்டுவரப்படவுள்ள நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை வரைவை தான் முன்னெடுப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டதாவது,

அரச தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று விரைவில் கொண்டுவரப்படவுள்ளது. இதனை பிரதான எதிர்க்கட்சி முன்வைக்கவுள்ளது.

இந்நிலையில் குறித்த நம்பிக்கையில்லாத பிரேரணைக்கான வரைவினைத் தயாரிக்கும் பணியை முன்னெடுக்குமாறு அவர்கள் என்னைக் கோரினார்கள். இதனையடுத்து அப்பணியைப் பெறுப்பெடுத்து முன்னெடுத்து வருகின்றேன் என்றார்.