தமிழகத்தை சென்றடைந்த மேலும் 15 இலங்கைத்தமிழர்கள்!

0
32

இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் அகதிகளாக தமிழகத்தை நேற்றிரவு சென்றடைந்துள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக படகு மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியை அவர்கள் சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு தஞ்சம் கோரி சென்றவர்களில் 3 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் அவர்களை முகாம்களுக்கு அழைத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.