அரசியலமைப்பு திருத்தக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்!

0
25

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், அறிக்கை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் அர்ப்பணிப்புக்காகவும் அவர்கள் ஆற்றிய பெறுமதிமிக்க சேவைக்காகவும் ஜனாதிபதி அவர்களைப் பாராட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை தீர்மானிக்கும் நோக்கில் அரசாங்கம் அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆழமாக பரிசீலிக்கும் என ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை இந்த அறிக்கை, நாடாளுமன்றத்துக்கு வெளியில் ஜனாதிபதிக்கு நெருக்கமான சட்டத்தரணிகளால் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.