தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது ஊர்காவற்றுறை சுகாதார அதிகாரியின் இடமாற்றம்

0
66

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரிக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றும் வைத்தியர் பாரா நந்தகுமார் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறைக்கு நிரந்தர சுகாதார உத்தியோகத்தர் நியமிக்கப்படாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட விடயம் காரணமாகவே இடமாற்றம் நிறுத்தப்பட்டிருக்கலாம்.