நாட்டின் சில பகுதிகளில் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு !

0
34

நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் உள்ளூர் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு கிலோ உள்ளூர் சம்பா அரிசியின் விலை சுமார் 280 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஒரு கிலோ உள்ளூர் சம்பா அரிசி 220 ரூபாவிற்கு அரிசி ஆலைகளால் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விலை உயர்வால் உள்ளூர் சம்பா அரிசியை வாங்கும் நுகர்வோருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.