ரணில் விக்ரமசிங்க விடுத்த எச்சரிக்கை!

0
34

நாட்டில் உள்ள சில வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயத்தில் இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நடுத்தர வர்க்க நாடும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வங்கியாளர்களின் விசேட மாநாடு நேற்று இரவு கொழும்பில் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.