அவசரமாக ஒன்று கூடிய ராஜபக்ஷ குடும்பம் – கூட்டத்தை தவிர்த்த கோட்டாபய

0
335

தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து ஆராய்வதற்காக ராஜபக்ச குடும்பத்தினர் நேற்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

ராஜபக்ச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான சமல் ராஜபக்சவின் கொழும்பு இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

எப்படியிருப்பினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.