வியாழன்று கூடும் நாடாளுமன்ற தெரிவுக் குழு!

0
34

உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற விவகாரம் தொடர்பிலான தெரிவு குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் நிதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) உள்ளிட்ட பிரதிநிதிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் தொடர்பில் அமைச்சின் அறிக்கைக்கு பிரகாரம் நிதியமைச்சர் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி ஆற்றவுள்ள விசேட உரையினை தொடர்ந்து காலை 11.00 மணிமுதல் மாலை 05.30 மணிவரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் நேற்று முன்தினம் பெற்ற நாடாளுமன்ற விவகாரம் தொடர்பிலான தெரிவு குழு கூட்டத்தின் போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 04, 05 மற்றும் 06 ஆகிய தினங்களில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும். 06ஆம் திகதியை தவிர்த்து ஏனைய இரு தினங்களில் காலை 10மணிமுதல் காலை 11.00 மணிவரை வாய்மொழி மூலமான கேள்வி வினவப்படும்.

மே மாதம் 05ஆம் திகதி காலை 10 மணிக்கு நாடாளுமன்ற ம் கூடுவதுடன் ஸ்ரீ சாகசிங்காராம விகாரை படையணி சட்டமூலம் மீளாய்வு செய்யப்படும்.

அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட கோப் குழு அறிக்கை தொடர்பில் சபை ஒத்தி வைப்பு விவாதம் காலை 10 மணிமுதல் மாலை 05.30 மணிவரை இடம்பெறவுள்ளது.

அத்துடன் உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற விவகாரம் தொடர்பிலான தெரிவு குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் 28ஆம் திகதி காலை 10.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.