வீழ்ச்சியடையும் வெதுப்பக பொருட்கள்! உற்பத்தியை 50 வீதத்தினால் குறைக்க தீர்மானம்!

0
346

பேக்கரி பொருட்களின் உற்பத்தி 50 வீத்தினால் குறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மா உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டதனால் இவ்வாறு நாளாந்த பேக்கரி உற்பத்திகளை குறைக்க நேரிட்டுள்ளது என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை உற்பத்தி வீழ்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உற்பத்தியைப் போன்றே விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு நிர்ணய விலை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 450 கிராம் எடையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 150 முதல் 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சில பேக்கரி உற்பத்திகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.