மகிந்த பதவியிலிருந்து கூடிய விரைவில் விலகுவார்! கருத்து வெளியிட்ட முஜிபுர் ரஹ்மான்

0
29

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச அடுத்த சில தினங்களுக்குள் பதவி விலகுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் உட்பட அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் முன்னர் அவர் பதவி விலகுவார் என தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது காணப்படும் சூழ்நிலையின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெறக் கூடி நிலைமை உருவாகியுள்ளது எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். எவ்வாறாயினும் பிரதமர் பதவியில் இருந்து தான் விலக போவதாக பரவி வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தானே அதன் பிரதமர் எனவும் நாட்டின் அரசியல் வரலாற்றை அறியாத நாடாளுமன்ற உறுப்பினர்களே தன்னை பதவி விலகுமாறு கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.