நாளை வத்திக்கானில் ஈஸ்டர் தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி!

0
33

 ஈஸ்டர் தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக வத்திக்கானில் விசேட பிரார்த்தனை செய்யப்பட உள்ளது.

நாளைய தினம் இந்த விசேட ஆராதனை வழிபாடுகள் மேற்கோள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் உயிரிழந்த இலங்கை மற்றும் வெளிநாட்டு கிறிஸ்தவர்களை நினைவுகூர்ந்து இந்த ஆராதனை நடாத்தப்பட உள்ளது.

இந்த விசேட ஆராதனையில் கொழும்பு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிலரும் பங்கேற்க உள்ளனர்.

இந்த விசேட ஆராதனை புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் தலைமையில் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆராதனையின் போது பாப்பாண்டவர் விசேட செய்தி ஒன்றையும் விளயிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.